Brother's day
BROTHER'S DAY
கரிசல் மண்ணில் காளையாய் உருவெடுத்து கையகத்தில் காலத்தை
அடிமையாக்கி அஞ்சா சிங்கமாய் இருந்தும் பாசப் பாலில் வடிகட்டிய
தேநீராய் நின்வளர்ச்சியை தூண்டுகிறாயே!! இமய உயரத்தில் நீ எனக்கு
இயற்கையானாய் அல்லவா?உன் அன்பிற்கு நிகரேதுமில்லை இப்பிணி
உலகில்!! இருப்பினும் ஏங்காத நாளில்லை உடன்பிறவில்லை என்றே!!
அனைத்தும் ஆன நீ தந்தையாகவும் தென்படுகிறாயே இம்மங்கிய
விழிகளுக்கு சிந்தனை கற்களை சிற்பமாக்கி அறிவுச்சுடரை அருள்புகுத்தி
கடவுளாய் உலா வரும் நாளுக்காக காத்திருக்கிறேன் நின்தங்கையாக!!!
உன்னவளின் வரவை எண்ணி நோன்பு புரிகின்றேன் அண்ணி
அவதாரத்திலே!!!!
எம் சகோதர்களுக்கு அர்பணம்...

Payangaram😍🥰
ReplyDeleteSuper jothi🔥
ReplyDelete