பிறந்தநாள் மதுரை மாநகரில் நீயோ எம்பெருமானின் மனையாளாய்! இருப்பினும் ஈசன் குடியிருப்பில் சிவப் புதல்வனை கண்ணாளனாய் கரம் பிடித்தவளே!! இரு செல்வத்தை ஈன்று என்றும் முடிவிலாஆனந்த நயம்புரிவாயாக!! அடைமழையில் அவதரித்த அன்பு அன்னையே!! நீரில் தோற்காத கயல் போன்ற விழிகளை பெற்றதாயே!! நீ ஈன்றெடுக்கா புதல்வியின் இன்ப வாழ்த்துக்கள் நின் பிறவியின் பொருட்டு
பிறந்தநாள் உடலும் உயிரும் ஒன்றிய தோற்றத்தில் ஊமை மொழியை தனக்கென கொண்டவனே!! கருவிழி சுழற்சியால் காந்ததன்மை கொண்டும் பார்வைக்கு பாலகனாய் அவதரித்த நாயகனே!! பத்து திங்கள் பார்த்திடாத நாட்களே நின் பாசம் அறியா பேதையானேனே!! என்றும் பல்லாண்டு இன்புற்று இவ்வையகம் ஆள நின் உடன்பிறவா சகோதரியின் உடன்பிறந்த வல்லமை மிக்க வாழ்த்துக்கள்🎉🎊 அன்பு அண்ணன் சஞ்சய், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..