இலக்கியத்தில் பெண்களும் இயற்கை நேசிப்பும் ஹைக்கூ கவிதைகள் நீரின் மேலே கொக்குகள் மரத்தின் அடியில் பாம்புகள் வளி பேசுகிறது என்னுடன்!!! வெயிலில் மிளிர்ந்தும் பனியில் உறைந்தும் மழையில் நனைந்தும் செழிக்கிறேன் இதமாக!! அறிவிக்காத போட்டிக்கு ஆயத்தமின்றி தேர்ந்தெடுத்தேன் வாழ்க்கையின் பாதியை!! கண்களை இழந்தேன் ஸ்பரிசத்தில் செவிகளை மறந்தேன் இசைகுரலில் நறுமணமத்தை அறியேன் உன் வருகையில் சுவை மறந்தேன் நின்மொழியில் மெய் மயங்கினேனே நின்மார்பிலே!! கவிதை விதையாய் தோன்றி உரமாகிய உறவை ஏற்று விருட்சமாகி விசாலமான தகவமைப்பை கொண்டவளே!! முக்கால சோவியாக சுழற்சி அமைப்பிலே வருங்கால வாழ்க்கையை விவரித்தாயே!! இல்லத்தின் தலைவாசலாய் இன்பத்தின் ஓரமாக அன்பில...
BROTHER'S DAY கரிசல் மண்ணில் காளையாய் உருவெடுத்து கையகத்தில் காலத்தை அடிமையாக்கி அஞ்சா சிங்கமாய் இருந்தும் பாசப் பாலில் வடிகட்டிய தேநீராய் நின்வளர்ச்சியை தூண்டுகிறாயே!! இமய உயரத்தில் நீ எனக்கு இயற்கையானாய் அல்லவா?உன் அன்பிற்கு நிகரேதுமில்லை இப்பிணி உலகில்!! இருப்பினும் ஏங்காத நாளில்லை உடன்பிறவில்லை என்றே!! அனைத்தும் ஆன நீ தந்தையாகவும் தென்படுகிறாயே இம்மங்கிய விழிகளுக்கு சிந்தனை கற்களை சிற்பமாக்கி அறிவுச்சுடரை அருள்புகுத்தி கடவுளாய் உலா வரும் நாளுக்காக காத்திருக்கிறேன் நின்தங்கையாக!!! உன்னவளின் வரவை எண்ணி நோன்பு புரிகின்றேன் அண்ணி அவதாரத்திலே!!!! எம் சகோதர்களுக்கு அர்பணம்...
Comments
Post a Comment