இலக்கியத்தில் பெண்களும் இயற்கை நேசிப்பும்
ஹைக்கூ கவிதைகள்
நீரின் மேலே கொக்குகள்
மரத்தின் அடியில் பாம்புகள்
வளி பேசுகிறது என்னுடன்!!!
வெயிலில் மிளிர்ந்தும்
பனியில் உறைந்தும்
மழையில் நனைந்தும்
செழிக்கிறேன் இதமாக!!
அறிவிக்காத போட்டிக்கு
ஆயத்தமின்றி தேர்ந்தெடுத்தேன்
வாழ்க்கையின் பாதியை!!
கண்களை இழந்தேன் ஸ்பரிசத்தில்
செவிகளை மறந்தேன் இசைகுரலில்
நறுமணமத்தை அறியேன் உன் வருகையில்
சுவை மறந்தேன் நின்மொழியில்
மெய் மயங்கினேனே நின்மார்பிலே!!
கவிதை
விதையாய் தோன்றி உரமாகிய உறவை
ஏற்று விருட்சமாகி விசாலமான தகவமைப்பை
கொண்டவளே!! முக்கால சோவியாக சுழற்சி
அமைப்பிலே வருங்கால வாழ்க்கையை விவரித்தாயே!!
இல்லத்தின் தலைவாசலாய் இன்பத்தின் ஓரமாக
அன்பில் தெரசாவாய் வீரத்தில் வேலுநாச்சியாராய்
உள்ளத்தில் உன்னை போன்று ஒருவருமில்லை
பூவோடு நாணலாக வனப்போடு நீயாக!!!
அந்தமன்றி ஜோதி மிளிர்வதும் உன்னாலே!!
மாரி பொழிவதும் காரிருள் தோன்றுவதும்
நின் அழைப்பிதழ் இன்றி விருந்தினராய்
வந்தவையே! உபசரிக்கும் பொருட்டு களிப்பில்
களைத்தோங்கினாயே!! எம் ஈடான பெண்மையே!!
என் நா பிறழ மறுக்கின்றனவே!!
நின் எழில் தழுவிய பயணத்திலே!!!!
கட்டுரை
சங்ககால இலக்கியத்தில் பெண்களை பற்றிய குறிப்பானது அதிகளவில் காணப்படுகின்றன. ஏனெனில், பெண்களின் நிலை மற்றும் அவர்களின் அறிவு பார்வை விசாலமாக்கு விரவி காணப்படுகிறது. பெண்களின் வீரம், தன்னம்பிக்கை,விடாமுயற்சி இவற்றிற்கு சான்றாக, ஒரு வீரத்தாய் முதல் நாள் போரில் தன் கணவனையும் உடன்பிறந்தோரையும் இழந்தார். மறுநாள் போர்களம் செல்ல தான் பெற்ற ஒரே ஒரு அரும்பெரும் புதல்வனை அழைத்து தலையில் எண்ணெயை தேய்த்து "செருக்களம் நோக்கி புகுக" என்று தன்னுடைய நாட்டை காப்பதற்காக பத்து திங்கள் தவமிருந்து ஈன்ற குழந்தையை அனுப்பினால், அந்த வீரத்தாய். அக்காலத்தில் நாடா(அ)புதல்வனா என்ற கேள்விக்கு நாடே என்று விடையளிக்கும் அளவிற்கு தேச பற்று மிக்கவர்களாக பெண்கள் வாழ்ந்து வந்தனர். போர்களத்தில் இறந்த நிலையில் உள்ள பிணங்களை பார்த்தவுடன் நம் புதல்வனோ (அ) கணவனாக இருப்பானோ என்ற அச்சமில்லை மாறாக,எதிரியிடம் புறமுதுகிட்டு இறப்பதை விட வீரமரணம் அடைந்து நாட்டின் அடையாளமாக திகழ்வது தான் சிறந்த வீரரின் அடையாளமாக கருதினர்.
பெண்கள் செலுத்தும் அன்பின் அளவானது முடிவிலி. அன்று முதல் இன்று வரை பெற்ற பிள்ளைக்கு உபசரிக்கும் அழகே தனி அழகுதான். தன் பிள்ளைக்கு தன்னை தவிர வேறெவரும் அன்போடும், வயிற்றின் மேல் பகுதியானது மார்பை தொட்டு உறவாடும் அளவிற்கு உணவை பரிமாற இயலாது. அவ்வாறு பரிமாறும் போது ஈரானின் கண்ணேறு பட்டு விடுமோ என்ற அச்சத்தில் வீட்டின் முன் கதவை அடைத்து விட்டு விருந்தளிப்பர்.விருந்தினரை உபசரிக்கும்" பண்பாடு நம் தமிழர் பண்பாடு.அவற்றிற்கு சான்றாக, ஒவ்வொரு வீட்டிலும் திண்ணை அமைத்து ண மண்பானையில் நீர்(அ) மோர் வைத்துவிட்டு வயல்வெளிக்கு செல்லுவர். ஏனெனில், வழிப்போக்கர் எவரேனும் அவ்வழியே செல்லும் போது இளைப்பாறுவதற்காக திண்ணையில், தாகம் தணிக்க போரையும் வைத்தனர்.
ஒவ்வொரு நாளும் அதிகாலை பிரம்ம முகூர்த்தம் 3.30 முதல் 4 மணியளவில் எழுந்து மாட்டுசாணத்தால் வீட்டின் முற்றத்தை மெழுகி பச்சரிசி கோலமிடுவர். பச்சரிசி கோலமானது எறும்புகளுக்கு தீனியாக அமைகிறது. அவ்வாறு கோலமிட்டு அவற்றில் பூசணிப்பூ இடுவர். ஏனெனில், வீட்டில் திருமண வயதில் பெண்கள் உள்ளனர் என்பதை சுட்டும் பொருட்டு அவ்வாறு செய்வது வழக்கம். இதனைத் தான் 19ம் நூற்றாண்டில் காதல் சோக பாடலாக (வாசலிலே பூசணிப்பூ வச்சுபுட்டா வச்சுபுட்டா நேசத்திலே எம்மனச தச்சுபுட்டா தச்சுபுட்டா...) என்ற வரிகள் எடுத்தியம்புகிறது.

பெண்கள் இயற்கையை மிகவும் நேசிப்பார்கள். இலக்கியத்தில் அகம் பற்றிய நூல்கள் பெண்களின் இயற்கை நேசிப்பு மற்றும் இயற்கையோடு தன் நிலையை ஒப்பிட்டு தலைவனுக்கு உணர்த்தும் பொருட்டு விளக்குகிறது. தலைவயின் பிரிவை தோழி தலைவனிடம் உணர்த்தும் வகையில் குறுந்தொகை, முல்லைப்பாட்டு, ஐந்திணைகளும் இயற்கையின் நேசிப்பை பெண்களின் களவு மற்றும் கற்பு வாழ்க்கையில் விளக்குகிறது. கார்காலத்தில் மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கின்றன. அந்த குளிர்ந்த மாலை நேரத்தில் பிச்சி பூக்கள் பூத்து நறுமணம் எங்கும் விரவி காணப்படுகிறது. பூவின் நறுமணம் தலைவியின் நாசியை தன்வசமாக்குகிறது.
காதலில் ஆண்மகன் தான் மன்னனாக இருப்பார்கள் என்று கூறுவது உண்டு. "மங்கை இல்லையேல் மன்மதனும் உண்டோ"என்னும் பொருட்டு காதல் இளவரசியாக வலம் வந்தனர். தலைவன் வீதியில் உலா வருவதை பார்க்க வந்து விட்டு அழகில் மயங்கி மாலையை கூட மறந்து விடும் அளவிற்கு உருகிகிவிட்டாள். சங்க இலக்கியங்களில் காணப்படுகின்ற பெண்களை தற்போது நாம் தெய்வங்களாக வழிபடுகிறோம். "சூடிக் கொடுத்த சுடர் கோடி, கோதைநாச்சியார் என்ற அடைமொழியை கொண்ட "ஆண்டாள்"தான் சூடிய மாலையை இறைவனுக்கு சூட்டி ஆண்டவனையே ஆண்டு விட்டால்.
வீரத்தில் வேலுநாச்சியார், அம்புஜத்தம்மாள், அஞ்சலையம்மாள், ஜான்சி ராணி நம் நினைவில் இன்றளவும் வாழ்ந்தும் வருகிறார்கள். அக்கால பெண்கள் படிப்பறிவில் சளைத்தவர்கள் அல்லர். " அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு"நிலையை அன்றே களைந்தனர். நாம் இன்றளவும் சங்ககாலப் பெண்கள் கல்லாதவர்கள் என எண்ணுகிறோம். இயற்கை செழிப்பானது அட்சய பாத்திரத்தில் அள்ள குறையாமல் அமுதசுரபி போல் கண்களுக்கு விருந்தளித்தன.
❤
ReplyDeleteSupper jothi
ReplyDeleteNyz
ReplyDeleteSuper 👍
ReplyDeleteSuper 👍
ReplyDeleteSuper. Congrats
ReplyDeleteSuper jothi doing well 👍
ReplyDelete