நண்பர்கள் தினம்
நண்பர்கள் தினம்
அன்பு தோழர்களே !! அவா நெஞ்சங்களே !!
ஆசை ஊற்றில் தெளிந்த நீராக
கவலை துவாரத்தை காற்றால் நிரப்புகிறாயே
அந்தமில்லா மணித்துளிகளில் முதற் புள்ளியாக
முடிவின்றி நகர்வதும் நீங்கள் தானே!!
வேரின்றி தழைத்த விருட்சமாகியஎன்னை
உரமாக அவதரித்து உயிர்கொடுத்தாயே!!! தனியுடைமை
அல்லாது பொதுவுடைமையாய் நட்பு வேட்கை
தணிக்கிறாயே? அன்னை உணர்வும் உள்ளத்தில்
பணக்காரணாக தோற்றத்தில் ஏழையாய் காட்சிறளிக்கிறாயே
இமை சொட்டும் நேரத்தில் விழி
மழைத்துளியை மொழியில் அடக்கி
வியப்பில் ஆழ்த்துகிறாய் தானே!! விண்ணோடு
முகிலாய் மண்ணோடு நறுமணமாய் உன்னோடு
பயணமாக நம்மோடு நட்பாக வாழ்வோடு
வளமாக செழித்து தரணி ஆள்வோமாக!!!

Semma..
ReplyDeleteThank you
ReplyDelete